வாணியம்பாடியில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வாணியம்பாடி அடுத்த கபூராபாத், வேப்பம்பட்டு, ஜனதாபுரம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பகல் 11.30 முதல் 12 மணிக்குள் பலத்த சத்தமும் பூமி அதிர்வும் இருந்ததாக பல்வேறு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Vellore, Vaniyambadi, Seismic
× RELATED வேலூர் வாணியம்பாடியில் போலி மருத்துவர்கள் மூவர் கைது