தமிழகத்தில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

சென்னை: வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : Tamil Nadu, Chennai, Chennai weather forecast
× RELATED சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்