பொன்னமராவதியில் கொட்டி தீர்த்த கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

பொன்னமராவதி: பொன்னமராவதி பகுதியில் நேற்று சுமார் 2 மணிநேரம் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் மழையின்றி கடும் வறட்சி நிலவியது. கடந்த 15 நாட்களுக்கு முன் லேசான மழைபெய்தது. இதன் பின்னர் மழையின்றி கடும் வெயில் வாட்டிவந்தது. ஒரு சில பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. போதிய மழையின்றி நிலக்கடலை பயிர்கள் கருகும் நிலைஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பொன்னமராவதியில் கனமழையும் மற்ற பகுதியில் பரவலாகவும் மழை பெய்தது.

Advertising
Advertising

இந்த மழை சாகுபடி செய்யப்பட்ட நிலைக்கடலை, காய்ந்த பயிர்கள் வளர்வதற்கும் ஏற்றதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்ய தயாராக இருந்த விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இந்த மழை இருந்தது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இரண்டு மணி நேரம் பெய்த மழையில் அண்ணாசலையில் வடிகால்போல் அதிக அளவு தண்ணீர் சென்றது. பொன்னமராவதியில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: