திருவில்லிபுத்தூர் அருகே குண்டும், குழியுமான கிராமச் சாலை: கண்மாய்க்குள் இறங்கிச் செல்லும் வாகனங்கள்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, கோட்டைப்பட்டி-மம்சாபுரம் கிராமச் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகனங்கள் கண்மாய்க்குள் இறங்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் அருகே, கோட்டைப்பட்டியிலிருந்து மம்சாபுரம் செல்லும் சாலை 2 கி.மீ தூரம் உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை முறையான பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க, பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertising
Advertising

சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், குறிப்பிட்ட தூரம் வரை, அருகில் உள்ள பொன்னாங்கண்ணி கண்மாய்க்குள் இறங்கி  செல்கின்றன. மழை இல்லாததால் தற்போது கண்மாய் வறண்டு கிடக்கிறது. இதனால், வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன், கோட்டைப்பட்டி-மம்சாபுரம் சாலையை சீரமைக்க, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: