சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதற்கு ஓர் இரவுக்கு கட்டணம் ரூ.24 லட்சம்!

நன்றி குங்குமம் முத்தாரம்

‘அமேசான்’, ‘ஸ்பேஸ்எக்ஸ்’, ‘வர்ஜின்’  போன்ற பெரு நிறுவனங்கள் மக்களை விண்வெளிச்சுற்றுலா அழைத்துப்போகும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதற்காக  அவை பல பரிசோதனை பயணங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் 2020-ம் வருடம் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு நாசா அனுமதி வழங்கியுள்ளது. ஓர் இரவு தங்குவதற்கான கட்டணம் 35 ஆயிரம் டாலர். அதாவது 24 லட்ச ரூபாய்.

ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே விண்வெளி நிலையத்தில் தங்க முடியும். அந்த மாதங்கள் என்னென்ன என்பதை நாசா விரைவில் அறிவிக்கும். தவிர, அமெரிக்காவின் விண்வெளி ஓடத்தில் பயணிக்கும் தனியார் விண்வெளி வீரர்களும் விண்வெளி சுற்றுலா பயணிகளும்  மட்டுமே தங்குவதற்காக அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் டிராகன் கேப்சூலையும்,  ‘போயிங்’ கட்டமைத்து வரும் ஸ்டார்லைனர் விண்கலத்தையும் நாசா பயன்படுத்திக்கொள்ளும்.

கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பட்ஜெட்டில், 2025-க்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தார். இதன் நிமித்தமாகவே விண்வெளி நிலை யத்தை வாடகைக்கு விட்டு கணிசமான பணத்தை ஈட்டு வதற்கு நாசா முயற்சி செய்கிறது என்று ஒரு தரப்பினர் சொல்கின்ற னர். ஏனென்றால் இதற்கு முன் சுற்றுலாப் பயணிகளோ அல்லது தனியார் விண்வெளி வீரர் களோ அங்கே தங்க அனுமதியில்லை.

இத்தனைக்கும் விண்வெளி நிலையம் ஒன்றும் நாசாவுக்கு சொந்தமானது இல்லை. 1998-ம் வருடன் நாசா ரஷ்யாவுடன் இணைந்து விண்வெளி நிலையத்தை உருவாக்கியது. பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல சுமார் 60 மில்லியன் டாலர் வரை செலவாகும். அதிகபட்சமாக அங்கே ஒரு மாதம் வரை தங்க முடியும்.

Related Stories: