×

மக்காச்சோள பயிர் இழப்பீட்டில் முறைகேடு: விவசாயிகளை ஏமாற்றியதாக புகார்

கோவை:  கோவை மாவட்டத்தில் மக்காச்சோள பயிர் பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில், மக்காசோளம் அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மக்காசோளம் பயிரில் படை புழு (ஸ்போடாப்டிரா புருஜிபர்டா) தாக்குதல் பரவலாக காணப்பட்டது. ஒட்டு ரகம் உட்பட பல்வேறு ரகங்களில் பயிரிடப்பட்ட மக்காசோளம் அறுவடைக்கு முன்பே நாசமானது.கதிர்களின் காம்பு, மற்றும் உண்ணும் பகுதியை படைப்புழுக்கள் அழித்தன என விவசாயிகள் பலர் முறையிட்டனர். இது தொடர்பாக மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறையினர் மூலமாக தமிழகத்தில் பாதிப்புள்ள மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. கோவை, திருப்பூர் உட்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பேரிடர் துறையினர், வருவாய் மற்றும் வேளாண்மை துறையினர் கள ஆய்வு நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் 2,177 எக்டரில் மக்கா சோள பயிர் நாசமானது தெரியவந்தது.இது தொடர்பாக சேத மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 2,557 விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு 13,400 ரூபாய் வீதம் 2,91,71,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் விவசாயிகளுக்கு தொகை வழங்கப்பட்டது. மக்கா சோள பயிர் இழப்பீட்டிலும், சேத மதிப்பு தயாரிப்பதிலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த புகாரை மாவட்ட நிர்வாகமும்,வேளாண்மை துறையினரும் கண்டு கொள்ளவில்லை. கோவை மாவட்டத்தில் 4 ஆண்டிற்கு முன், வறட்சி இழப்பீடு தொகை வழங்கியதிலும் இதேபோல் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை சேர்க்கப்படும் என அறிவித்த மாவட்ட நிர்வாகம், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களை மட்டும் வறட்சி பாதிப்பு பட்டியலில் சேர்த்து சுமார் 95 ேகாடி ரூபாய் நிவாரண தொகையை வாரி வழங்கியது. மக்காசோள இழப்பீட்டிலும் அரசியல் செல்வாக்கு மற்றும் விதிமுறை மீறல் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்கவேண்டும். உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பெற்று தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சேத மதிப்பீடு தயாரிக்கப்பட்டு 2,557 விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு 13,400 ரூபாய் வீதம் 2,91,71,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

Tags : Abuse ,compensation,farmers,complained,cheating
× RELATED விவசாயிகள் சங்க கூட்டத்தில் மோதல்