அதிகாரிகளே பொதுமக்களை நாடிவந்து குறைகளை தீர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளோம்: முதல்வர் பழனிசாமி

சேலம்: பொதுமக்கள் அதிகாரிகளை தேடி செல்வதற்கு பதிலாக, அதிகாரிகளே பொதுமக்களை நாடிவந்து குறைகளை தீர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் தொடங்கி வைத்த பின் பேசிய அவர், சிறப்பு குறை தீர் திட்டபடி, அலுவல் குழுவினர் நேரடியாக பொதுமக்களிடம் சென்று மனுக்களை பெற்று, விரைவில் தீர்வு காண்பார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.


Tags : Chief Minister's Special Redressal Program, Salem, Chief Minister Palanisamy
× RELATED முதலமைச்சரின் சிறப்பு குறை...