ஆன்லைன் விற்பனையை அதிகரிக்க முயலும் நிறுவனங்கள்: கைகொடுக்குமா பண்டிகை சீசன்?

சென்னை: பண்டிகை சீசனில் செல்போன் , மின்சாதனங்கள் போன்றவற்றின் விற்பனையை அதிகரிக்க இணையதள வழி வணிக நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக  சந்தை படுத்துதலின் வடிவமும் மாற்றம் கண்டு இணையதளம் வாயிலாக பெரும் அளவில் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றனர். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்கள், இந்த முறையில் மின்சாதனங்கள் என தொடங்கி மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் விற்கின்றனர்.

சீசனுக்கேற்ப பொருட்களை சந்தைப்படுத்தும் முறையையும் இந்நிறுவனங்கள் கையாண்டு வருகின்றனர். இந்த வகையில் நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ்  என அடுத்தடுத்து வரும் பண்டிகை காலத்தில் செல்போன்கள் , மின்சாதனங்கள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட வற்றின் விற்பனையை அதிகரிக்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்காக இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் செய்திருக்கும் ஆர்டர்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பண்டிகை காலங்களில் பொருட்களுக்கு வழங்கப்படும் மிகுதியான தள்ளுபடியின் காரணமாக  வழக்கமான விற்பனையை விட 40 சதவீதம் அதிகமாக இருக்கும் என இந்நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Tags : Online sales, increase, strive, companies
× RELATED ஆன்லைன் நிறுவனங்களுக்கு பியூஷ் கோயல் எச்சரிக்கை