சென்னையில் தீபாவளி பண்டுச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: போலீசார் வலைவீச்சு

சென்னை: சென்னையில் தீபாவளி பண்டுச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்து தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க எதுவாக தகவல் அளிக்கும் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த பானுமதி என்பவர் தனது மகன் யுவராஜ் மற்றும் மகள்கள் ஷீலா, சுகன்யா ஆகியோர்களுடன் ஏலச்சீட்டு நடத்தினார்.

Advertising
Advertising

பணம் செலுத்தியவர்களுக்கு தீபாவளி பரிசு தருவதாக கூறி ஏமாத்திவிட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பத்துடன் பானுமதி தலைமறைவானார். அவர்களிடம் பணம் கட்டி ஏமாந்த 100 பேர் சென்னை கிண்டியில் உள்ள சென்னை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பானுமதி குடும்பத்தினர் ரூ.2 கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக தொடர்பாக பொருளாதாரக்குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பானுமதிக்கு சொந்தமான ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. தொடர்ந்து பணம் கட்டி ஏமாந்தவர்களுக்கு திருப்பி வாழங்கும் நடவடிக்கைகளை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் செய்துள்ளனர். இந்நிலையில் பானுமதி குடும்பத்தினரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 044-2504332,94981 43072 என்ற எண்ணில் தகவல் அளிக்கும் படி பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: