×

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடந்த விபத்தில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடந்த விபத்தில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் முதல்வர் பழனிசாமி அளித்தார். விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என கூறினார். விபத்தில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். நேற்று துறையூர் அருகே கோயிலுக்கு நேர்த்திக் கடனுக்காக சென்றபோது, லோடு ஆட்டோ டயர் வெடித்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த ஆட்டோ எரகுடி அருகே மதியம் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவின் முன்பக்க டயர் திடீரென வெடித்து தாறுமாறாக சென்றது.டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரம் இருந்த 70 அடி ஆழமுள்ள  கிணற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

பின்னர் துறையூர் போலீசாருக்கும், தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த கோர சம்பவத்தில் குணசீலன் (55), குமாரசி (43), கோமதி (40), கயல்விழி(35), எழிலரசி (40),  சரண்குமார் (10), சஞ்சனா (5), யமுனா(8) ஆகிய 8 பேர் மூச்சுத்திறணறி இறந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை பிரேத  பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் போலீசார் துறையூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கிணற்றில் விழுந்த லோடு ஆட்டோ மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Tags : Eight people,killed,accident, Trichy district
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி