புழல் அருகே மனைவியை கொன்று போலீஸ்காரர் தற்கொலை

சென்னை: புழல் அருகே புத்தகரத்தில் மனைவியை கொன்றுவிட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அடுத்த புத்தகரம் திருமால் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் நரேஷ்(39). இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய என்பவருடன்  திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு வருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகன் வருண் நேற்று இரவு நடன வகுப்புக்கு சென்றிருந்தார். இரவு 9 மணியளவில் கணவன், மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் நரேஷ் மனைவி ஜெயயை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் மனைவியின் துப்பாட்டாவால் மின்விசிறியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Advertising
Advertising

 இதுதொடர்பாக தகவல் அறிந்த மாதவரம் துணை கமிஷனர் ரவளபிரியா, புழல் கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தங்கதுரை உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று கணவன் மனைவியில் சடலத்தை கைப்பற்றி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி இடையே என்ன பிரச்னை என்பது குறித்து போலீசார் அப்பகுதியில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: