பால் விலை உயர்வால் யாருக்கும் பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜூ சொல்கிறார்

மதுரை: மதுரையில்அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்மொழி வளர்ச்சிக்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கடந்த 2001ல் இருந்து தமிழ்மொழி வளர்ச்சிக்காக அரசு ₹400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் ஆவின் பால் விலை தவிர்க்க முடியாத காரணத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

 இதுபோன்ற அறிவிப்புகளை ஜெயலலிதா 9 முறை யோசித்து அறிவித்தால், எடப்பாடி பழனிச்சாமி 16 முறை யோசனை செய்து செயல்படுத்தியுள்ளார். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில்தான் அறிவிக்கப்படும். காங்கிரஸ் கட்சி தமிழ்மொழியை சுட்டிக்காட்டி என்றும் பேசியதில்லை. ஆனால் சுதந்திர தின உரையில்  பிரதமர் திருக்குறளை சுட்டிக்காட்டி பேசினார். இது தமிழர்களுக்கு பெருமையாக உள்ளது. மத்திய அரசு தமிழகத்தில் எந்தவொரு மொழியையும் திணிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Tags : No one , milk price, Selur Raju
× RELATED தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல்...