பொருளாதார தேக்கநிலை அரசு இன்னும் விழிக்கவில்லை: சுப்ரமணியன், தென்னிந்திய கார் விற்பனையாளர் நலச்சங்க பொதுச்செயலாளர்

இந்தியாவில் கார் உற்பத்தி திடீரென குறைந்ததற்கு, அதன் விற்பனை சரிவு மட்டுமல்ல, அதை விட, மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா?  பொருளாதார தேக்க நிலை தான். இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக டாட்டா நிறுவனமே 8க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மூடி விட்டனர். வீல்ஸ் இந்தியா, மாருதி நிறுவனமே தனது உற்பத்தியை குறைத்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் மற்றும் ேபால்ட், நட்டு தயாரிக்க கூடிய, கார் உதிரிபாகங்கள் தயாரிக்க கூடிய நிறுவனங்கள் இப்போது ஒரு ஷிப்டை குறைத்துள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது.  மகிந்திரா, மாருதி சுசுகி, டொயோட்டா, அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களும் கடந்த சில வாரங்களில் 2 முதல் 9 நாட்களை பணியில்லாத நாட்களாக அறிவித்துள்ளன. இதெல்லாம் பொருளாதார தேக்க நிலை அதிகரிப்பதை காட்டுகிறது. இந்த நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து விட்டதால், ஒப்பந்த அடிப்படையில் உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் எந்த நேரமும் மூடப்படும் நிலையில் உள்ளன. வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் கடந்த சில வாரங்களில் மட்டும் 3 லட்சத்துக்கும் கூடுதலான பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் மேலும் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து நிலவி வருகிறது. இதைப் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அரசு இன்னும் விழித்து கொள்ளவில்லை என்று தான் தோன்றுகிறது.

நாங்கள், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர் நலச்சங்கம் என்று 8 மாநிலங்களை ஒருங்கிணைத்து வைத்துள்ளோம். எங்கள் யூஸ்டு கார் தொழிலும் நலிந்து போய் உள்ளது.  இந்நிலையில் பழைய கார் விற்பனையும் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் மாதம் 50 யூஸ்டு கார் விற்ற இடத்தில் இப்போது 5 கார் கூட விற்பனை ஆகவில்லை. தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முதலாவது காரணம் பொருளாதார வீழ்ச்சி. இரண்டாவது இந்த அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தான். இதனால், மக்கள் புதிதாக கார் வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, கார் உற்பத்தி செய்வதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால், கார் விலை நாங்கள் உயர்த்தும் நிலையில், அதற்கும் வரியை போன்று பொதுமக்களுக்கு தருகின்றனர். ஒரு பொருளுக்கு இரண்டு வரியும் சேர்த்து பொதுமக்கள் தலையில் தான் விழுகிறது. ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு வருமான வரி கிடையாது என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் தொழில் பழைய நிலை ஏற்படும். பணமதிப்பிழப்பிற்கு பிறகு பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து மீளாத நேரத்தில் ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தனர். இப்போது வரி அதிகமாக இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, படிப்படியாக குறைக்கின்றனர். இருப்பினும், மத்திய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையால் பணப்புழக்கம் என்பது குறைந்து விட்டது. இதனால், பொதுமக்களின் வாங்கும் திறன் குறைந்து விட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் மத்திய அரசு உடனடி நடவடிக்கை  எடுக்க வேண்டும். உற்பத்தியை குறைத்து விட்டதால், ஒப்பந்த அடிப்படையில் உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் எந்த நேரமும் மூடப்படும் நிலையில் உள்ளன.

Related Stories: