ஆட்டோ மொபைல் பிரச்னையை அரசு உன்னிப்பாக பார்க்கிறது: எம்.சி.சம்பத், தொழில்துறை அமைச்சர்

நமது மாநிலத்தை பொறுத்தவரையில் முதலீட்டை ஈர்க்கும் திறன் கொண்ட மாநிலம். இதில் எந்த சந்தேகமும் இல்லை; தொழில் மாநிலமாக உருவாக்குவதில் தொடர்ந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். என்சிஇஏஆர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதில் நமது மாநிலம் முதல் இடத்தில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இந்த அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.  இன்னொரு ஆய்வறிக்கையில் கூட முதலீடுகளை ஈர்ப்பதில் நம்பர் 1 இடத்தில் தமிழகம் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் முதலிடத்தில் நமது மாநிலம் உள்ளது. உள் கட்டமைப்பு வளர்ச்சியில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஒட்டு மொத்தமாக  வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. சுகாதாரம், கல்வி மேம்பாட்டில் 3ம் இடத்தில் உள்ளது. இந்த தகவல்கள் எல்லாம் அந்த ஆய்வறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.  திறன் வாய்ந்த மனிதவளம் கொண்ட மாநிலம் நமது மாநிலம். மின்சாரம் மின் மிகை மாநிலமாக உள்ளது. உட்கட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழகம் நல்ல நிலைமையில் உள்ளது. மேலும், கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சென்னை-கன்னியாகுமரி இன்ஸ்ட்ரியல் காரிடர், சென்னை-பெங்களூரு இன்ஸ்ட்ரியல் காரிடர் அமைக்கவிருக்கிறோம். இதற்கான பணிகளை மத்திய அரசு-சிட்கோ இணைந்து இதை செய்ய உள்ளது.

Advertising
Advertising

இவையெல்லாம் இருப்பதால் தான் முதலீட்டாளர்களை வரவேற்கக்கூடிய மாநிலம் இந்த மாநிலமாக உள்ளது.  இந்த மாநிலத்தில் எந்த நிறுவனம் வேண்டுமென்றாலும் தொழில் தொடங்க முன்வருவது என்பது சாதாரணமாக நடப்பது ஒன்றாக உள்ளது. காரணம், தமிழகத்தில் நாங்கள் தரும் வசதிகளால் பல முன்னணி தொழிற்சாலைகள் தாமாக முன்வந்து ஆலைகளை அமைக்கின்றன. மேலும், தமிழகத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு நாங்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இங்குள்ள அனைத்து வசதிகள் குறித்து அவர்களுக்கு நாங்கள் எடுத்துரைப்போம். மற்ற எந்த மாநிலங்களிலும் இது போன்ற வசதியில்லாததால் இங்கு வருகின்றனர். ஜிஎஸ்டி வந்த பிறகு வணிகவரித்துறை மூலம் தொழில் தொடங்குவதற்கான அனுமதி பெறுவதில் கூடுதல் நேரம் எடுக்கும் நிலை இருந்தது. அதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனுமதி ஒற்றை சாளர அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு ேதவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்.

ஆட்டோமொபைல் தொழில் என்பது மத்திய அரசின் தொடர்புடையது. தற்போது இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னைதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை முதலீட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க முனையும். இதற்காக முதல்வர் தீவிரமாக ேயாசித்து வருகிறார்.

அத்துடன் விடாமல்,  இந்த தொழிலை மேம்படுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதவுள்ளார். கடிதம் எழுதுவதோடு நிற்காமல், ஆட்ேடாமொபைல் தொழிற்சாலைகளின் பிரச்னைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. ஆட்டோமொபைல் தொழில் என்பது மத்திய அரசின் தொடர்புடையது. தற்போது இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னைதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை முதலீட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Related Stories: