×

சரிந்து வரும் வாகன விற்பனை-கம்பெனிகள் மூடப்படும் அபாயம் என்ன செய்யப்போகிறது அரசு?: பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் பரிதாபம்

எங்கு பார்த்தாலும் தொழிலாளர்கள் வேலையிழப்பு, உற்பத்தி குறைப்பு. என்ன நடக்கிறது ஆட்டோமொபைல் நிறுவனங்களில்? இந்த துறையில் மட்டும் 3.5  கோடி பேர் நாடு முழுக்க வேலை இழப்பர் என்று பீதியை கிளப்புகிறது பிரபல நிறுவனம். இதில் தமிழ்நாடும் விலக்கல்ல; இந்தியாவின் டெட்ராய்டு எனப்படும் சென்னையின் ஆட்டோமொபைல் நிறுவனங்களை கொண்ட பெரும்புதூர், ஒரகடம் உட்பட்ட பகுதிகள் நிலை இன்னும் பரிதாபம். ஒரு பக்கம் தொழிலாளர்கள் அடிக்கடி ஸ்டிரைக்; இன்னொரு பக்கம் உற்பத்தியை குறைத்து கொண்டே இருப்பதால் தொழிலாளர்கள்  வேலைநாட்களை குறைக்க வேண்டிய கட்டாயம்.

பெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் பல பிரபல கம்பெனிகள் கார்களை தயாரிக்க சில  ஆண்டுகள் முன் தொழிற்சாலையை உருவாக்கின. பல்லாயிரக்கணக்கான பேர் வேலைக்கு  அமர்த்தப்பட்டனர். இன்று அவர்கள் நிலை  கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிறுவனங்கள் மட்டுமல்ல, இந்த கம்பெனிகளுக்கு உதிரி பாகங்களை தயாரித்து தரும் ஆயிரக்கணக்கான சிறிய கம்பெனிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களை நம்பி இந்த பகுதிகளை சுற்றி சென்னையில் பல இடங்களில் கட்டப்பட்ட பல கோடி மதிப்புள்ள பல மாடிக்குடியிருப்புகளும், இப்போது வாங்க ஆளில்லாமல், அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த 19 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெரும் விற்பனை சரிவை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை; இதில் தமிழக அரசு என்ன நடவடிக்ைக எடுக்கப்போகிறது என்பது தான் பலரின் கேள்வி. இதோ நான்கு கோணங்களில் அலசல்:

Tags : Risk , auto sales ,companies, do?
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...