×

சென்னை மாநகராட்சி எல்லையில் பேருந்து செல்லும் சாலைகளில் இருக்கும் 82 சென்டர் மீடியன்கள் 2 கோடியில் சீரமைப்பு: அழகுபடுத்தும் பணி தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லையில் பஸ்கள் செல்லும் சாலைகளில் உள்ள 82 சென்டர் மீடியன்கள் 2 கோடியில் சீரமைக்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியில் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள பேருந்து தட சாலைகளும், 5623 நீளமுள்ள உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளை அனைத்தும் பேருந்து சாலைகள் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து  தட சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்களை சீரமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள 82 சென்டர் மீடியன்கள் 2 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுவருகிறது.ராயபுரம் மண்டலத்தில் உள்ள பேசின் பாலம் சாலை, பல்லவன் இல்ல சாலை, வாலாஜா சாலை, ராஜாஜி சாலை, காமராஜர் சாலை, பாந்தியன் சாலை, காந்தி இர்வின் சாலை உள்ளிட்ட 14 சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்கள் 42 லட்சம்  செலவில் சீரமைக்கப்பட்டுவருகிறது.

திரு.வி.க நகர் மண்டலத்தில் உள்ள சிவ இளங்கோ சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, மாதவரம் சாலை, யானை கவுனி பால சாலை, பெரம்பூர் ரயில்வே ஸ்டேசன் சாலை உள்ளிட்ட 6 சாலைகள் 16 லட்சம்  செலவில் சீரமைக்கப்படவுள்ளது. இதைப்போன்று அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள கீழ்பாக்கம் கார்டன் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, 2வது அவின்யூ, 3வது அவின்யூ, 4வது அவின்யூ உள்ளிட்ட 13 சாலைகள் 5 லட்சம் செலவில்  சீரமைக்கப்படவுள்ளது. நகரின் மையப்பகுதியான தேனாம் பேட்டை மண்டலத்தில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை, ஹாரிங்டன் சாலை, கல்லூரிச் சாலை, கிரீம்ஸ் சாலை, டிடிகே சாலை, ஜிஎன்செட்டி சாலை, ஆர்.கே.சாலை உள்ளிட்ட 20  சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்கள் 1 கோடி செலவில் சீரமைக்கப்படவுள்ளது. இதைத் தவிர்த்து கோடம்பாக்கம் மற்றும் அடையார் மண்டலத்தில் உள்ள 22 சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்கள் 45 செலவில் சீரமைக்கப்படவுள்ளது.  இந்த சீரமைப்பு பணியின் போது சென்டர் மீடியன்களில் உள்ள காய்ந்துபோன செடிகள் அகற்றப்பட்டு புதிய செடிகள் நடப்படும். மேலும் வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளப்படவுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் உள்ள பேசின் பாலம் சாலை, பல்லவன் இல்ல சாலை, வாலாஜா சாலை, ராஜாஜி சாலை, காமராஜர் சாலை, பாந்தியன் சாலை, காந்தி இர்வின் சாலை உள்ளிட்ட 14 சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்கள் 42 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுவருகிறது.

Tags : Madras Corporation, roads, Alignment, Beginning, Beautification Work
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...