சிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு

சென்னை: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பள்ளிக் கல்வி  வாரியம்(சிபிஎஸ்இ) மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இதுவரை 12 தேர்வுகளை நடத்தி முடித்துள்ள நிலையில் அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதன்படி 13வது  மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடக்க உள்ளது.

இந்த தேர்வு வழக்கம்போல 20 மொழிகளில் 110 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி  இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகிறது. இதன்படி செப்டம்பர் 18ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்டணங்களை செப்டம்பர் 23ம் தேதி செலுத்த வேண்டும். போட்டித் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடக்கிறது. அதனால் இன்று முதல் சிபிஎஸ்இ இணைய தளத்தில் மேற்கண்ட தேர்வுக்கான விவரங்களை தெரிந்து  கொள்ளலாம். அதில் கூறப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தேர்வில் இடம் பெறும் தாள் ஒன்று மட்டும் எழுத விரும்பும் பொதுப்பிரிவினர் 700 கட்டணம் செலுத்த  வேண்டும். இரண்டு தாள்களும் எழுத விரும்பினால் ₹1200 செலுத்த வேண்டும். அதேபோல எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத விரும்பினால் ₹350ம், இரண்டு  தாள்களும் எழுத விரும்பினால் ₹600ம் கட்டணமாக செலுத்த  வேண்டும்.

Related Stories: