பணம் கேட்டு ஆந்திராவில் 5 விசை படகுகளுடன் காசிமேடு மீனவர்கள் சிறைபிடிப்பு: மீட்க அதிகாரிகள் விரைவு

சென்னை: மீன் பிடித்து ெகாண்டிருந்த தமிழக மீனவர்களை பணம் கேட்ட ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட விசை படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், தனித்தனியாக பிரிந்து மீன்பிடிப்பது வழக்கம்.அந்தவகையில், ஆந்திர மாநிலம் நெல்லூர்-ஹரிகோட்டா இடையே சீனிவாசபுரம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், 5 மீன்பிடி படகுகளையும் மீனவர்களையும் சிறைபிடித்தனர். அப்போது,  எங்களுக்கு பணம் தந்தால்தான் படகுகளை விடுவிப்போம் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர். அதன்படி மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள், ஆந்திரா மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க ஆந்திரா  விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் காசிமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: