சென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய முயற்சி கற்பிக்கும் திறனை மேம்படுத்த ஆசியர்களுக்குள் கலந்துரையாடல்

சென்னை: சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்த பள்ளிகளில் 85 ஆயிரம்  மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அதன்படி உட்கட்டமைப்பு மேம்பாட்டு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ₹100 கோடி  செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களிடம் கற்பிக்கும் திறனை ேமம்டுபத்த புதிய முயற்சியை செயல்படுத்தபட்டுள்ளது. அதன்படி பாடம் தொடர்பாக ஆசியர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி  நடத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் இந்த கலந்துரையாடல் திட்டம் அமல்படுத்தபட்டுள்ளது.

வாரத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை ஆணையர், கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர்கள், அந்தப்  பள்ளியின் பாட ஆசியர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதில் ஒவ்வொரு பாடம் தொடர்பான அனைத்து ஆசிரியரும் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். இதில் பதில்களையும் மற்ற ஆசியர்கள் தெரிவிக்கலாம். இதன் ஒரு ஆசியரின்  கற்பிக்கும் முறையை மற்ற ஆசியர் அறிந்து கொள்ள முடியும். சமீபத்தில் நடைெபற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஒரு புத்தகத்தில் இடம்பெற்ற  கணக்கு தவறு என்று ஒரு ஆசிரியர் ஆதாரங்களுடன் தெரிவித்தார்.  மறுப்பு தெரிவித்த மற்றொரு ஆசிரியர் இந்த கணக்கு சரிதான் என்றார். இறுதியில்  பல்வேறு முறைகளில் ஆய்வு செய்து அந்த கணக்கு சரிதான் என்று முடிவு செய்யப்பட்டது.  ஒவ்வொரு ஆசியரும் தங்களின் கற்பிக்கும் முறை தொடர்பாக  கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் ஆசிரியர்களின் கற்பிக்கும்  திறனை மேம்படுத்த முடியும்.

Related Stories: