வங்கி, அரசு துறைகளை குறிவைக்கும் சைபர் கிரிமினல்கள் அதிகரிப்பு: தடுக்க முடியாமல் அரசு திணறல்

புதுடெல்லி: வங்கிகள், ராணுவம் உட்பட அரசு துறைகளில் தான் அதிகமாக சைபர் குற்றங்கள் நடக்கின்றன. இதை தடுப்பதற்காகவே அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது என்று ெதரியவந்துள்ளது. எப்போது டிஜிட்டல், ஆன்லைன் முறை வந்ததோ, குற்றங்களும் கூடவே வந்து விட்டன. சைபர் கிரிமினல்கள் இப்போது உலகம்  எங்கும் உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, அரசு துறைகள், வங்கிகள் போன்றவற்றில் அதிகமாக சைபர்  குற்றங்கள் நடக்கின்றன. இதுகுறித்து உலகம் முழுவதும் இருக்கும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சிஸ்கோவின் இந்திய நிறுவனமான  சிஸ்கோ இண்டியா சமீபத்தில் எடுத்த சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதி  ஆண்டில் சைபர் குற்றங்கள்  குறித்து வெளியிட்டுள்ளது. சர்வே தகவல்கள் வருமாறு:

* இந்தியாவில் சைபர் குற்றங்கள் இப்போது பரவி வந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாட்டு ஹேக்கர்கள் மட்டுமல்லாமல், ஆசிய பசிபிக் பகுதிகளில் இருந்தும் ஹேக்கர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட துவங்கி உள்ளனர்.

* அரசு துறைகளில் தான் அதிகமாக 26 சதவீதம் சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

* வங்கிகள், அரசு துறைகளில் இருந்து தகவல்கள் திருட்டு, பைல்கள் திருட்டு  அதிகம் நடந்துள்ளன.

* அரசின் நிதித்துறை அலுவலகங்களில் கடந்தாண்டு 19.6சதவீதம் அளவுக்கு சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. இதுபோல, அரசின் முக்கிய உள் கட்டமைப்பு துறை அலுவலகங்களில் 15.1 சதவீதம் அளவுக்கு சைபர் குற்றங்கள் நடந்துள்ளன.

* வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 20.1 சதவீதம் அளவுக்கு குற்றங்கள் நடந்துள்ளன.

* அரசின் துறைகளை எடுத்து கொண்டால், குறிப்பாக சுகாதார துறை அலுவகங்கள், ராணுவ துறை பிரிவுகள் மற்றும் தொலை தொடர்பு அலுவலகங்களில் சைபர் குற்றங்கள் நடந்துள்ளன.

 இந்த அலுவகங்களில் பணத்தை விட அதிகமாக பைல்கள், தகவல்கள்  திருட்டுகளை தான் ஹேக்கர்கள் செய்துள்ளனர்.   இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Stories: