காபி டே நிறுவனத்துக்கு 4,970 கோடி கடன்

புதுடெல்லி: காபி டே நிறுவனத்துக்கு 4,970 கோடி கடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.புகழ் பெற்ற காபி  டே நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்தா, சமீபத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பல ஆயிரம் கோடி கடன் தொல்லையால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. காபி டே நிறுவன கடன்கள்  குறித்து நிறுவனத்தின் செயலாளர் சதானந்த பூஜாரி நேற்று அளித்த பேட்டி: காபி டே நிறுவனக் கடன் 480 கோடி, காபி டே குளோபல் கடன் 1,097 கோடி, வே டூ வெல்த் நிறுவனக் கடன் 121 கோடி, டாங்லின் டெவலப்மெண்ட் கடன் 1,622 கோடி, டாங்லின் ரீடெய்ல் ரியாலிட்டி கடன் 15 கோடி, காபி டே ஓட்டல்ஸ்  ரிசார்ட்ஸ் கடன் 137 கோடி, சிகால் லாஜிஸ்டிக் கடன் 1,488 கோடி, மேக்னா சாப்ட் கன்சல்டிங் கடன் 10 கோடி என மொத்தம் 4,970 கோடி கடன் நிலுவையில் உள்ளது.

இதில் பெங்களூரு டாங்லின் டெவலப்மெண்ட் நிறுவனத்தின்  துணை நிறுவனமான குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் 2600 கோடியில் கடனின் ஒரு பகுதி செலுத்தப்படும். மீதக் கடன்  2400 கோடியாக இருக்கும்.


Tags : 4,970 crore ,loan, Coffee Day
× RELATED ஜிஎஸ்டியில் 450 கோடி மோசடி ஈரோடு...