போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை

தாம்பரம்: குரோம்பேட்டை அப்பாராவ் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் கவுரி சங்கர் (37).  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து போலீசாக வேலை செய்து  வருகிறார். நேற்று முன்தினம் இரவு கவுரி சங்கர் வழக்கம் போல வேலைக்கு  சென்றார். இவரது மனைவி கோகிலா ஹரிணி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதை  நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே  நுழைந்து, பீரோவில் இருந்த 12 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை  கொள்ளையடித்து சென்றனர். புகாரின்  பேரில், குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Robbery, policeman's,house
× RELATED சேலத்தில் அரசு பொறியாளர் வீட்டில் கொள்ளை