அரசு போக்குவரத்து கழக கோட்டங்களில் சக்கரங்களை சோதித்த பிறகே பேருந்துகளை இயக்க வேண்டும்: கிளை மேலாளர்களுக்கு உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக கோட்டங்களில் தினசரி சக்கரங்களை பரிசோதித்த பிறகே அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ேபாக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமாக சென்னை, விழுப்புரம், சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் ேகாட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தினசரி 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இதை நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் விரைவு போக்குவரத்துக் கழம் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இவற்றில் ஒருசில பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தினசரி பஸ்களை இயக்குவதற்கு முன்பாக சக்கரத்தில் பழுது இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அதை சரிசெய்த பிறகே இயக்க வேண்டும் எனக்கூறி அனைத்து கிளை மேலாளர்களுக்கும் போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தலைமையக உத்தரவுப்படி பஸ் சக்கரங்களை சோதித்து குறைபாடு இருப்பின் உடனடியாக சரிசெய்ய வேண்டும். அதன்பிறகே தடத்தில் இயக்க வேண்டும். டயர் உழைப்புத்திறன், டயர் பாதுகாப்பு மற்றும் பேருந்து இயக்கத்தின் பாதுகாப்பு கருதியே மேற்கண்ட அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கிளைகளில் மேற்படி நடைமுறை பின்பற்றாமல், பணி தொய்வில் உள்ளது. வார பராமரிப்பு பணியாளர்கள் மேற்படி பணிகளை மேற்கொள்ளாமல், பணி தொய்வில் உள்ள மிகவும் கண்டிக்கத்தக்கது. தொழில்நுட்ப பணியாளர்கள் மேற்படி பணி மேற்கொள்வதை தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் மேற்பார்வை செய்ய வேண்டும். கிளை மேலாளர்கள் இதனை உறுதி செய்ய வேண்டும். இனி மாதந்தோறும் கூட்டாண்மை அலுவலக உத்தரவுப்படி 5ம் தேதிக்குள் பணி மேற்கொள்ளப்பட்டதை தொழிற்நுட்ப பிரிவிற்கு எழுத்து பூர்வமாக தெரிவிக்கவேண்டும். தொழில்நுட்ப பிரிவு குழு மூலம் மேற்படி பணிகளில் ஏதேனும் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டால் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: