கொட்டும் மழையிலும் ஹாங்காங் மக்கள் போராட்டம்

ஹாங்காங்:  ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனா கொண்டு சென்று விசாரிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் மனித உரிமை அமைப்பினர், ஜனநாயக ஆதரவு அமைப்பினர்  கடந்த 3 மாதமாக  வார இறுதி நாட்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமாக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த வாரம் விமான  நிலையம் முடக்கப்பட்டது. நேற்று ஹாங்காங் பூங்காவில் இருந்து பேரணி தொடங்கியது. கனமழையையும் பொருட்படுத்தாமல், குடைகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.Tags : Hong Kong ,people, struggle ,pouring rain
× RELATED உலக நாடுகளின் ஆதரவை பெற பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் மக்கள் போராட்டம்