×

சில்லி பாயின்ட்...

* பெங்களூருவில் இந்தியா நீலம் - இந்தியா பச்சை அணிகளிடையே நடந்து வரும் துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் நேற்று கனமழை காரணமாக கைவிடப்பட்டது. டாசில் வென்ற இந்தியா பச்சை அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்தியா நீலம் அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்திருந்தது (49 ஓவர்) குறிப்பிடத்தக்கது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. * டோக்கியோவில் நடைபெறும் ‘ஒலிம்பிக் டெஸ்ட்’ மகளிர் ஹாக்கியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தியா சார்பில் வந்தனா கட்டாரியா, குர்ஜித் கவுர் கோல் போட்டனர்.
* டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் உள்ள ஒரு கேலரிக்கு இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியின் பெயர் சூட்டப்பட உள்ளது.
* சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 கோடி, 1.65 கோடி). 


Tags : Chili Point ...
× RELATED சில்லி பாயின்ட்…