ஸ்டோக்ஸ் 115* ரன் விளாசல் ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன் இலக்கு

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், ஆஸ்திரேலிய அணிக்கு 267 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன், ஆஸ்திரேலியா 250 ரன்னுக்கு ஆல் அவுட்டாகின. ஆஸி. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வேகம் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய அதிவேக பவுன்சர் பந்து ஹெல்மெட்டை தாக்கியதால், ஸ்டீவன் ஸ்மித் தலையில் காயம் அடைந்து களத்தில் சாய்ந்தார். அவருக்கு களத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது, தனது பந்துவீச்சில் காயம் அடைந்த வீரர் குறித்து கொஞ்சமும் கவலைபடாமல் சக வீரருடன் ஆர்ச்சர் சிரித்துப் பேசியபடி நின்றது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் 92 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

Advertising
Advertising

தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்டில் ஸ்மித் மேற்கொண்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு பதிலாக லாபஸ்ஷேன் சேர்க்கப்பட்டார். மாற்று வீரரும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஈடுபட ஐசிசி அனுமதி அளித்த பிறகு, இப்படி களமிறங்கும் முதல் வீரர் லாபஸ்ஷேன் என்பது குறிப்பிடத்தக்கது.8 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 4ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ் 16, பட்லர் 10 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை விளையாடினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தது. பட்லர் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் சதம் அடித்தார்.

இங்கிலாந்து 71 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஸ்டோக்ஸ் 115 ரன் (165 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), பேர்ஸ்டோ 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 3, சிடில் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி. களமிறங்கியது.  வார்னர் 5, கவாஜா 2 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆஸி. அணி  5.3 ஓவரில் 19 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியதால், ஆட்டம் விறுவிறுப்பானது.

Related Stories: