அத்திவரதர் வைபவம் நிறைவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் காஞ்சிபுரம்

சென்னை: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயில் அத்திவரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற்றது. அத்திவரதர் ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். அத்திவரதர் வைபவம் தொடங்கிய நாள் முதல் நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வந்ததால் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதனால் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வரதராஜபெருமாள் கோயில் வளாகம் அருகில் உள்ள செட்டித்தெரு, வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சின்ன காஞ்சிபுரம், டோல்கேட், பெரியார் நகர், திருவீதிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் காஞ்சிபுரம் எல்லைகளான கீழம்பி, நசரத்பேட்டை, ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை உள்ளிட்ட இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதனால் உள்ளூர்வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் காவல் துறையினருடன் வாக்குவாதம், பிரச்னை என நாளுக்கொரு சம்பவங்கள் அரங்கேறின. மேலும் சின்ன காஞ்திபுரம் பகுதி, ரங்கசாமி குளம், பெரியார் நகர், அம்மன்காரத் தெரு, அஸ்தகிரி தெரு, வடக்கு மாட வீதி, தெற்கு மாடவீதி, திருவீதிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், வேலைக்கு செல்லவும் முடியாமல் கடும் சிரமங்களை சந்தித்தனர். மேலும் வாடகை வாகனங்களை ஓட்டும் தொழிலாளர்கள் வாகனங்களை வீட்டுக்கு எடுத்து வர முடியாமல் சிரமப்பட்டனர்.இந்நிலையில் அத்திவரதர் வைபவம் 48 நாட்கள் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. ஆதி அத்தி வரதர் சயன கோலத்தில் அனந்த சரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சனிக்கிழமை இரவு பாதுகாப்புடன் வைக்கப்பட்டார். வெள்ளிக்கிழமையுடன் தரிசனம் முடிவடைநத்தால் சனிக்கிழமை முழுவதும் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு சென்ற வழிகளான தெற்கு மாடவீதி, வடக்கு மாட வீதி, அஸ்தகிரி தெரு, அம்மங்காரத் தெரு, பெரியார் நகர், ரங்கசாமி குளம் உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் காஞ்சிபுரம் பகுதி மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் அத்தி வரதர் வைபவம் தொடங்கிய நாட்களில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால்  காலை 8.30 மணிமுதல் பகல் 1.30 மணிவரை மட்டுமே பள்ளிகள் இயங்கின. இன்று முதல் பள்ளிகளும் வழக்கம்போல செயல்படும். இதனால் காஞ்சிபுரம் பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

Related Stories: