வன்முறை சம்பவங்கள் நடந்ததால் ஸ்ரீநகரின் சில பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடு விதிப்பு: மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று வன்முறை ஏற்பட்டதால், சில பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 5ம் தேதி ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போரட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். வதந்திகள் பரவுவதை தடுக்க இன்டர்நெட் போன் சேவைகளும் முடக்கப்பட்டன.  

இந்நிலையில், காஷ்மீரில் 35 காவல் நிலைய பகுதிகளில் நேற்று முன்தினம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, போன் இணைப்பு மற்றும் 2ஜி இன்டர்நெட் சேவைகள் ெகாடுக்கப்பட்டன.

சமூக இணையதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜம்மு ஐ.ஜி முகேஷ் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார். கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் கட்டுப்பாடுகள் தளர்ப்பத்தப்பட்டபின் நகரில் 6 இடங்களில் இளைஞர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வதந்திகள் பரவியதால், மொபைல், இன்டர்நெட் சேவைகளை மீண்டும் துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டது.

Related Stories: