டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெட்லி நலம் குறித்து தலைவர்கள் விசாரிப்பு

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பல தலைவர்கள் விசாரித்தனர். அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நிலையை காரணம் காட்டி, அவர் கடந்த மக்களவை தேர்தலிலும் போட்டியிடவில்லை. இந்நிலையில்,  கடந்த 9ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பலதுறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல தலைவர்கள் ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனை சென்று, ஜெட்லி உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தனர்.

இந்நிலையில், நேற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து ஜெட்லி உடல் நலம் குறித்து விசாரித்தனர். இமாச்சல் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, டெல்லி முதல்வர் ெகஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ராம்விலாஸ் பஸ்வான்,  ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் உட்பட பலர், ஜெட்லியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

Related Stories: