தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது: முதல்வர் பழனிசாமி பேச்சு

சேலம் : எடப்பாடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி திறந்து வைத்தார். விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், இளந்திரையன் பங்கேற்றுள்ளனர். பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி: பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

நீதிமன்றங்களை கணினி மயமாக்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன. தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

Related Stories: