'ஹை டெக் வசதிகளுடன் அலுவலகம்’ புதுவையில் ஆன்லைன் மூலம் விபசாரம்

* புரோக்கர்கள் அதிரடி கைது
* 3 மாடல் அழகிகளும் சிக்கினர்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹை டெக் வசதிகளுடன் அலுவலகம் அமைத்து ஆன்லைன் மூலம் விபசாரம் நடத்திய புரோக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாடல் அழகிகள் மூன்று பேரும் சிக்கினர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் ஆன்லைன் விபசாரம் கொடி கட்டி பறந்து வருகிறது. இதனை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும் குறையவில்லை. ஏற்கனவே பியூட்டி பார்லர், ஸ்பா போன்றவற்றில் விபசாரம் நடந்ததால் அதுபோன்ற இடங்களில் ரெய்டு நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். மேலும் விபசாரத்திற்கு உடந்தையாக இருந்ததாக சில போலீசார் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் விபசாரம் நடப்பதாக பெரியகடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு விரைந்து சென்று அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது அங்கிருந்த மாடல் அழகிகள் 3 பேர், போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து உடந்தையாக இருந்த 3 புரோக்கர்களை மடக்கி பிடித்தனர். அவர்களை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ஒரு தெருவில் ஹை டெக் வசதியுடன் அலுவலகம் வைத்து ஆன்லைன் மூலம் அந்த கும்பல் விபசாரத்தை நடத்தி வந்துள்ளது. இதன் மூலம் பலரை ஆன்லைனில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட பெண்களின் புகைப்படங்களை காண்பித்து பணம் பெற்று குறிப்பிட்ட ஓட்டல்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு, குடும்ப விவரங்களை கேட்டு பிளாக்மெயில் செய்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இவர்கள் 3 மாடல் அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியபோது போலீசாரிடம் வசமாக சிக்கினர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய மாடல் அழகிகளின் விபரங்கள் குறித்தும் தெரியவந்தது. இதையடுத்து 3 மாடல் அழகிகளையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.


Tags : 'High Tech Facility, Office, Innovation, Online Adultery
× RELATED காகித பயன்பாட்டை குறைப்பதற்கு...