வங்கதேசத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை

வங்கதேசம்:  வங்கதேச தலைநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15,000 குடிசைகள் எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாக்காவில் நெருப்பூர் எனும் இடத்தில் குடிசை பகுதி உள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரிசையாக இருந்த குடிசை வீடுகளில் திடீரென தீ பற்றியது. பிளாஸ்டிக் போன்ற மேற்க்கூரைகள் அமைக்கப்பட்டு இருந்ததால் தீ வேகமாய் அருகில் இருந்த குடிசைகளுக்கு தீ பரவியது.

Advertising
Advertising

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர விபத்தில் 50,000 பேர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிர்சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையை ஒட்டி பலர் வெளியூருக்கு சென்றதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல் கடந்த பிப்ரவரி மாதம் குடிசைகள் நிறைந்த பகுதியில் தீ விபத்து  ஏற்பட்டதில் 81 பேர் பலியானதும் மார்ச் மாதத்தில் அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில்  25 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: