கடந்த 8 மாதங்களில் ரூ.4,688 உயர்வு: தங்கத்தின் விலை அதிகரித்தாலும், இறக்குமதி வரியை குறைக்க முடியாது...நிர்மலா சீதாராமன் பேட்டி

அகமதாபாத்: தங்கம் விலை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்ந்து வருகிறது. ஜனவரி 1ம் தேதி சவரன் ரூ.24,168க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 1ம் தேதி ரூ.25,488, மார்ச் 1ம் தேதி ரூ.25,096, ஏப்ரல் 1ம் தேதி ரூ.24,272, மே 1ம் தேதி  ரூ.24,304, ஜூன் 1ம் தேதி ரூ.24,632, ஜூலை 1ம் தேதி  ரூ.25,728 என்று படிப்படியாக விலை உயர்ந்தது. அது மட்டுமல்லாமல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு சாதனையும் படைத்து வருகிறது. அதாவது, ஆகஸ்ட் கடந்த 1ம் தேதி ஒரு  சவரன் 26,480, 2ம் தேதி 27,064, 3ம் தேதி 27,328, 5ம் தேதி 27,680, 6ம் தேதி 27,784, 7ம் தேதி 28,376, 8ம் தேதி 28,464, 9ம் தேதி 28,552, 10ம் தேதி 28,656, 12ம் தேதி சவரன் 28,824, 13ம் தேதி 29,016க்கும் விற்கப்பட்டது. கடந்த 14ம் தேதி தங்கம் விலை  திடீரென சரிவை சந்தித்தது. சவரனுக்கு 392 குறைந்து ஒரு சவரன் 28,624க்கு விற்கப்பட்டது. இந்த விலை சரிவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுநாளே தங்கம் விலை அதன் போக்கை காட்டியது.

அதாவது, 15ம் தேதி தங்கம் விலை கிராம் 49 அதிகரித்து ஒரு கிராம் 3,618க்கும் சவரனுக்கு 320 அதிகரித்து ஒரு சவரன் 28,944க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு 35 குறைந்து ஒரு  கிராம் ரூ.3,583க்கும் சவரனுக்கு 280 குறைந்து ஒரு சவரன் 28,664க்கு விற்கப்பட்டது. நேற்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் 28,856க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம்  மார்க்கெட்டுக்கு விடுமுறை நாளாகும். அதனால் சனிக்கிழமை விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது என்பது தெரியவரும்.

இந்நிலையில், அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டாலும், அவற்றுக்கான இறக்குமதி வரியை குறைக்க முடியாது என தெரிவித்தார். நகை செய்தல் உள்ளிட்ட மதிப்பு கூட்டு நடவடிக்கைகளுக்காக, தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய நிர்மலா சீதாராமன், கச்சா எண்ணெய் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை போலவே, தங்கமும் இந்தியாவில் உற்பத்தி  செய்யப்படுவதில்லை என்பதை சுட்டிகாட்டினார். மேலும், இறக்குமதி தங்கத்திற்காக, செலவிடப்படும் அன்னிய செலாவணியின் அளவை தள்ளுபடி செய்ய முடியுமா? என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

Related Stories: