தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

சென்னை: பெரும்பாலான மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை  பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமாலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், விழுப்புரம், நாகை, புதுவை, காரைக்கால், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழகத்தில் தற்போது வரை 8 விழுக்காடு குறைவாகவும் சென்னைக்கு 19 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Stories: