×

காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்; கட்சியில் வேறு யாருக்கும் அந்த சக்தி இல்லை...ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி

கொல்கத்தா: நேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் என நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின்  உயர்மட்டக் குழு ஆலோகனை கூட்டத்தில், கட்சி இடைக்கால தலைவராக சோனிய காந்தி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையிலி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்  சவுத்ரி, காங்கிரஸ் போன்ற வலிமையான கொள்கைகள் உள்ள ஒரு கட்சியால் தான் மதவெறி பா.ஜனதாவை எதிர்கொள்ள முடியும்.

பா.ஜனதா மாநில கட்சிகளை வலுவிழக்கச் செய்வது கொள்கையற்ற செயல். இதேபோல மாநில கட்சிகள் செயல்பட்டால் அவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும். இதன்மூலம் நாடு இருதுருவ அரசியல் தலைமையை நோக்கி செல்லும்.  இருதுருவ அரசியல் வந்துவிட்டால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். எனவே காங்கிரசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

சோனியா காந்தி கட்சிக்கு மீண்டும் தலைமை தாங்க தயக்கம் காட்டினார். ஆனால் ராகுல் காந்தி ராஜினாமாவால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மூத்த தலைவர்கள் கூறியதால் ஏற்றுக்கொண்டார். சோனியா காந்தி கட்சியின்  இடைக்கால தலைவர் தான். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம். அதில் எந்த தவறும் இல்லை. எங்கள் கட்சியில் வேறு யாருக்கும் அந்த சக்தி  இல்லை. அது உண்மையில் மிகவும் கடினம் என்றும் கூறினார்.


Tags : The Gandhi family is a sign of the Congress party; No one else in the party has that power ... interview of Adir Ranjan Chaudhry
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்