பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர்திறப்பு அதிகரிப்பு

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் மீன்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 105 அடி உயரம் கொண்ட பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியது. இதனை அடுத்து கடந்த 16-ஆம் தேதி முதல் அணையிலிருந்து கீழ் பவானி பிரதான வாய்க்காலில் விநாடிக்கு 500 கன அடி விகிதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலையில் நீர்திறப்பு 1000 கன அடியாகவும் நேற்று மாலை 1,700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு நீர்திறப்பு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகபட்சமாக 2,300 கன அடியாக அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணையின் நீர்மட்டம் 94.52 அடியாகவும், நீர் இருப்பு 24.6 டி.எம்.சி யாகவும் நீர்வரத்து வினாடிக்கு  5,058 கன அடியாக நீர் திறப்பு வினாடிக்கு 3,200 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக ஏற்கனவே பவானிசாகர் அணையில் 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி என மொத்தம் 3,200 கன அடியாக திறக்கப்பட உள்ளது.

Related Stories: