ஜெப்ரானிக்ஸின் புதிய ஸ்டோர் இப்போது கோவையில்

ஐடி மற்றும் கேமிங் உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம், மொபைல்/லைஃப் ஸ்டைல் ஆக்சஸரீஸ் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகளில் இந்தியாவின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூரில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் தனது முதல் பிரத்யேக ரீடெயில் கடையைத் தொடங்கியுள்ளது. மக்களின் பிராண்டாக அறியப்படும் ஜெப்ரானிக்ஸ், நிறுவனத்தை விரைவாக முன்னேற்ற பாதையில் கொண்டு சென்ற ‘என்றும் முன்னனியில்’ என்ற தனது உறுதியான தத்துவத்தின்படி செயல்களை மேற்கொள்வதை என்றும் நம்புகிறது. வாங்கும் போது தனிப்பட்ட அனுபவத்தை இந்த ரீடெயில் அணுகுமுறை வழங்குவதோடு மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த பிராண்டு விழிப்புணர்வையும் அதிகரிக்கும்.

பல்வேறு வகையான தயாரிப்புகளை மக்களுக்கு வழங்கும் இந்த பிராண்டு, 82 விருதுகளுடனும் ஆற்றல்மிக்க பிராண்டு தூதரான ஹிருத்திக் ரோஷன் அவர்களுடனும் ஸ்டைல், நிபுணத்துவம் மற்றும் ஆளுமைக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது. கோலிவுட் புகழ், டேனியல் ஆன்னி போப் கடையை திறந்து வைத்தார். மேலும் அவர், “ஜெப்ரானிக்ஸ் தனது கடையை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிராண்ட் இவ்வளவு காலமாக பல சமீபத்திய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அவர்கள் கடையில் உள்ள பலவகையான தயாரிப்புகள் என்னை மெய்சிலிர்க்க வைகின்றன. இவற்றை எல்லாம் மக்கள் நிச்சயம் பெரிதும் விரும்புவார்கள்!” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திறப்பு விழாவில், ஜீப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜேஷ் தோஷி பேசுகையில், “சென்னையில் தான் முதன் முதலில் ஜெப்ரானிக்ஸின் பயணம் தொடங்கியது, இதனால் தமிழ்நாட்டுக்கு என்றும் எங்கள் மனதில் தனி இடம் உண்டு, அங்கு தான் ஜெப்ரானிக்ஸ் ஒரு நிறுவனமாக தன் பயணத்தைத் தொடர்ந்தது. இதனால் கோவையில் எங்கள் பிரத்யேக கடையைத் திறப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு பிராண்டாக, மக்களின் பிராண்டாக வளருவதற்கு உதவிய எங்களின் பரந்த தயாரிப்பு வகைகள் மூலம் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். உயர்ந்த தரமும் செயல்திறனும் உள்ள எங்கள் தயாரிப்புகள் பலதரப்பட்ட மக்களுக்கும் உதவக்கூடியவை” என்றார்.

மேலும் திரு தோஷி, “எங்களின் முக்கிய நோக்கம் பிரண்டு பற்றிய விழுப்புனர்வை மக்களிடத்தில் உருவாக்குவது, எதிர்காலத்தில் இதுபோன்ற மேலும் ரீடெயில் கடைகளைத் திறக்க விரும்புகிறோம்”. என்று கூறினார்.

மீடியா தொடர்பான மேலும் கேள்விகளுக்குத் தொடர்பு கொள்க:

கோமல்: 7338777923

pr@zebronics.com

Related Stories: