மழை காரணமாக திமுக நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: மழை காரணமாக வேலூரில் இன்று நடைபெற இருந்த நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்த  தொகுதியின் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் வாணியம்பாடியில்  இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாபெரும் பொதுக் கூட்டம் தொடர் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 25ம் தேதியன்று வாணியம்பாடியில் மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: