×

பூந்தமல்லி-கிண்டி மார்க்கத்தில் அனைத்து பஸ்களும் போரூர் மேம்பாலத்தின் மேல் செல்வதால் வருவாய் இழப்பு

சென்னை: பூந்தமல்லியிலிருந்து கிண்டி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் போரூர் மேம்பாலம் மேலாக செல்வதால் மாநகரப்போக்குவரத்துக்கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அன்பழகன், மாநகரப்போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் பொதுமக்கள் சேவைக்காக பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி  வருகிறது. சென்னை, பூந்தமல்லி மற்றும் ஐயப்பன் தாங்கல் மார்க்கமாக போரூர் வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து சேவை உள்ளது. குறிப்பாக கிண்டி, சைதை போன்ற இடங்களுக்கும் இயக்கப்படுகிறது. மேலும் பூந்தமல்லியிலிருந்து  கிண்டி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் போரூர் மேம்பாலத்தின் மேல் செல்கிறது. இதனால் போரூர் மற்றும் குன்றத்தூர் பிரதான சாலையில் வசிக்கும் மக்கள் கிண்டி, சைதாப்பேட்டை செல்ல மாநகர பேருந்தை பயன்படுத்த  வேண்டுமானால் சுமார் 200 மீட்டர் தூரம் நடக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

மேலும் 200 மீட்டர் தூரம் நடந்து கிண்டி, சைதாப்பேட்டை செல்ல மாநகர பேருந்து நிறுத்தத்திற்கு நடக்கமுடியாமல் போரூர் சிக்னல் அருகில் (போரூர் மேம்பாலம் கீழ்) ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் நிறுத்தி மாநகர் பேருந்து பயணிகளை  ராமாவரம், மணப்பாக்கம், பட்ரோடு, கிண்டி, சைதை போன்ற இடங்களுக்கு அழைத்து செல்கிறார்கள். இதனால் மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Poonthamalli, Kindi Markham, Buses, Porur Bridge
× RELATED பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865...