மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு திமுக சார்பில் 15 லட்சம் உணவு பொருட்கள் : மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்துக்கு திமுக சார்பில் 15 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்களை மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கன மழையிலும்-நிலச்சரிவிலும் சிக்கி பேரிடருக்கு உள்ளாகியிருக்கும் மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அம்மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக நிர்வாகிகளும் -  தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள்,  துணிமணிகள் உள்ளிட்ட  அடிப்படை தேவைகளுக்கு வேண்டிய பல்வேறு  நிவாரண பொருட்களை  அனுப்பி வைத்திட வேண்டும்” என திமுக நிர்வாகிகளுக்கும்-தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் நேற்று ₹15 லட்சம் மதிப்பிலான 1,500 மூட்டை அரிசி அடங்கிய மூன்று லாரி நிவாரணப் பொருட்களை கடும் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொடியசைத்து அனுப்பி வைத்தார். அத்துடன் சென்னை மேற்கு மாவட்டம், மயிலாப்பூர் பகுதி முன்னாள் செயலாளர் சம்பந்தம் மைத்துனர் ஏழுமலை அளித்த 100 மூட்டை அரிசியையும் அனுப்பி வைத்தார்.

அப்போது, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ.,  தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., திருப்போரூர் எல்.இதயவர்மன் எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் வெ.விசுவநாதன், ஜி.சிஅன்புச்செழியன், கலைவாணி காமராஜ், ஒன்றிய, நகர செயலாளர்கள் வீ.தமிழ்மணி, எம்.கே.தண்டபாணி, ந.கோபால், ஜெ.சண்முகம், வே.கருணாநிதி, டி.பாபு, பையனூர் சேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் து.மூர்த்தி, எம்.பி.மூர்த்தி, பேரூர் செயலாளர்கள் மு.தேவராஜ், லயன் எஸ்.சங்கர் மற்றும் மாவட்ட அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் வி.விஜயகுமார், எல்.பிரபு, தி.க.பாஸ்கரன், மேடவாக்கம் ஏழுமலை, எஸ்.ஆல்பர்ட், ஏ.கே.கருணாகரன், எஸ்.சதீஷ், தாம்பரம் டி.காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்த தகவல் திமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: