×

அணைகள் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு வட மாநிலங்களை மீண்டும் மிரட்டும் கனமழை : பஞ்சாப், டெல்லிக்கு எச்சரிக்கை

ஜெய்ப்பூர்: வட மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகாண்ட் மற்றும் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தொடர் கனமழை பெய்தது. கடந்த வாரம் இது சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த இருதினங்களாக அங்கு மீண்டும் கனமழை பெய்து வருகிறது. பஞ்சாபில் பக்ரா அணையிலும் டெல்லியில் யமுனாவிலும் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அங்குள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக காங்க்ரா மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பஞ்சாபில் லூதியானா, அமிர்தசரஸ், மொகாலி, சண்டிகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்ரா அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால், தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. சட்லெஜ் ஆற்று பகுதியில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் அஜ்மீர், ஜோத்பூர், பிகானீர், வனஸ்தாலி, பில்வாரா, சில்கார் பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கிறது. கொல்கத்தாவில் 186.1 மி.மீ. மழை பெய்துள்ளது. கேரளாவில் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இங்கு காணாமல் போன 28 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Heavy rains threaten, Northern states
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...