நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை கவலையளிக்கிறது : மாயாவதி டிவீட்

லக்னோ: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் நிலவும் பெரிய பொருளாதார மந்தநிலை கவலைக் கொள்ளச் செய்துள்ளதாக  மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி நாட்டின் பொருளாதார நிலை கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, விலைவாசி உயர்வு, படிப்பறிவின்மை, சுகாதார பிரச்னை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. இது மேலும் கவலை கொள்ளச் செய்கிறது. பொருளாதார மந்தநிலையால் வர்த்தகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளதுடன் மனந்தளர்ந்தும் காணப்படுகின்றனர். வேலைவாய்ப்பு குறைந்துள்ளதால் இளைஞர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். எனவே மத்திய அரசு உடனடியாக பிரச்னையை தீர்க்க நடவடிக் கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

Related Stories: