கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு சந்திரபாபு வீட்டை உடனே காலி செய்ய நோட்டீஸ் : விஆர்ஓ நடவடிக்கை

திருமலை: கிருஷ்ணா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் என விஆர்ஓ நோட்டீஸ் வழங்கினார். ஆந்திர முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, குண்டூர் மாவட்டம் உண்டவல்லியில் உள்ள கிருஷ்ணா நதிக் கரையை ஒட்டி உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  குடும்பத்தினருடன் ஐதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சைலம், நாகார்ஜுன சாகர் அணைகள் நிரம்பி விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் சந்திரபாபு தங்கி இருக்கும் வீட்டை சுற்றியுள்ள வாழை மற்றும் விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் சந்திரபாபு வீட்டில் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில்  நீர்மட்டம் சற்று அதிகரித்தாலும் வீட்டிற்குள் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதையடுத்து நேற்று உண்டவல்லி கிராம வருவாய் அலுவலர் பிரசாத், சந்திரபாபு  நாயுடு வீட்டிற்கும், அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கினார். அதில் ‘கிருஷ்ணா நதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வீட்டை காலி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: