பிளாஸ்டிக் குப்பை உருவாக்கும் நகரங்களில் நாட்டில் 2வது இடத்தில் சென்னை: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

சென்னை: நாட்டிலேயே பிளாஸ்டிக் குப்பை உருவாக்கும் நகரங்களில் சென்னை 2ம் இடத்தில் உள்ள நிலையில் பிளாஸ்டிக் குப்ைப உருவாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன செய்யப்பபோகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி  எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை ஒரு மாநில அரசால் அமல்படுத்த  முடியாது, இது மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டம் என்று பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே இந்த திட்டம் 25 மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வெற்றி பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் வைத்திருப்பவர்கள், விற்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அக்டோபர் 2ம் தேதி முதல் ஒருமுறை  பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் தினசரி 25,940 டன் பிளாஸ்டிக் குப்பை உருவாகுவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் 4,059 டன் குப்பை குறிப்பிட்ட 60 பெரு நகரங்களில் உருவாகிறது. இந்நிலையில் நாடு முழுவதும்  பிளாஸ்டிக் குப்பை உருவாக்கும் நகரங்களில் டெல்லி, சென்னை முதல் 2 இடங்களில் உள்ளது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட ஆண்டறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி 2010-11 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு  முடிவு அதில் வெளியிட்டுள்ளது.  நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் நாள் ஒன்றுக்கு 690 டன் பிளாஸ்டிக் குப்பை உருவாகிறது. அதற்கடுத்தபடியாக சென்னையில் 429 டன் பிளாஸ்டிக் குப்பை உருவாகிறது. அடுத்த இடங்களில்  கொல்கத்தா 426 டன், மும்பை 408 டன் குப்பையை உருவாக்குகின்றன. தற்போது இந்த அளவு மேலும் அதிகரித்திருக்கும். அதனால் பிளாஸ்டிக் குப்பை உருவாக்கத்தை குறைக்க அரசு உடனடி நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்பதே  சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.       

Related Stories: