தங்கம் விலை மீண்டும் 29 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரே நாளில் சவரனுக்கு 192 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 192 அதிகரித்தது. மீண்டும் தங்கம் விலை சவரன் 29 ஆயிரத்தை நெருங்குகிறது. 1ம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் கடந்த 14ம் தேதி குறைந்தது. சவரனுக்கு 392 குறைந்து ஒரு சவரன் 28,624க்கு விற்கப்பட்டது. மறுநாள் 15ம் தேதி தங்கம் விலை சவரன் 28,944 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென சரிந்தது. கிராமுக்கு ₹35 குறைந்து ஒரு கிராம் 3,583க்கும், சவரனுக்கு 280 குறைந்து ஒரு சவரன் 28,664க்கு விற்கப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று தங்கம் விலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு 24 அதிகரித்து ஒரு கிராம் 3,607க்கும், சவரனுக்கு 192 அதிகரித்து ஒரு சவரன் 28,856க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை மீண்டும் சவரன் 29 ஆயிரத்தை நெருங்கி வருவது நகை வாங்குவோரை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாளாகும். அதனால் சனிக்கிழமை விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் ெதாடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: