கஞ்சா கடத்தல் வழக்கில் கோர்ட்டில் வாலிபர் சரண்

சென்னை: விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு பேருந்து மூலம் கஞ்சா கடத்த முயன்ற தஞ்சாவூரை சேர்ந்த விவேகானந்தன் (30) என்பவரை கடந்த 2ம் தேதி, கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில்  தலைமறைவாக இருந்த திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அகிலன் (26) என்பவர் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டில் உள்ள போதை தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

* வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ரயில்வே கான்ட்ராக்டர் ஜெயக்குமார் (35) என்பவரை சரமாரி வெட்டிக்கொன்ற வழக்கில், வியாசர்பாடி பள்ளத்தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (28), நேரு நகரை சேர்ந்த ஜெபா (25), திவாகர் (25)  ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertising
Advertising

* பட்டினப்பாக்கம் பகுதியில் மது  பாட்டில்களை பதுக்கி விற்ற பட்டினப்பாக்கம், முள்ளிமாநகர், குடிசை பகுதியை  சேர்ந்த ஆரவள்ளி (39), செல்வம் (57) மற்றும் ஈஞ்சம்பாக்கம் டாஸ்மாக் கடை பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற  சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் பகுதியை சேர்ந்த கதிர் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* செங்குன்றம் சோலையம்மன் நகரை சேர்ந்த  கார்த்திக் (24), கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சுகன் ஈஸ்வரன் (24),  பாடியநல்லூரை சேர்ந்த ராகுல் (23), மாங்காடு பகுதியை சேர்ந்த அப்துல் பஷீர் (20) விஜயநல்லூரை  சேர்ந்த  வினோத் (23) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான  விஜயகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

* கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் முன்பு நிறுத்தப்படும் பைக்குகளை திருடி வந்த துரைப்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நந்தகுமார் (20), நீலாங்கரை அண்ணா நகரை  சேர்ந்த முருகன் (19), விழுப்புரம் மாவட்டம், இறையூரை சேர்ந்த முருகன் (19), மயிலம், காமராஜர் நகரை சேர்ந்த  செல்வம் (19)  ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* பேசின் பிரிட்ஜ் பகுதியில் கஞ்சா விற்று வந்த புளியந்தோப்பு பகுதியை  சேர்ந்த வேலழகி (57), அஞ்சலி (60), கார்த்திகேயன் (எ) சேட்டு (31),  விஷ்ணு (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: