ஆட்டோமொபைல்,..2019 ஜூலை டாப் 10 கார் விற்பனை பட்டியல்

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடம் பிடித்துள்ளது. இப்பட்டியலில், 10-ல் 7 இடங்களை மாருதி சுஸுகி  நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களை ஹூண்டாய் பெற்றுள்ளது. இதர போட்டியாளர்களுக்கு இப்பட்டியலில் இடமில்லாமல் போய்விட்டது. கடந்த ஜூலை மாதம் 15,062 வேகன் ஆர் கார்களை மாருதி சுஸுகி விற்பனை  செய்துள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதத்தில் 10,288 வேகன் ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அப்போது 5வது இடத்தில் இருந்த வேகன் ஆர்  தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் 2-வது இடத்தை மாருதி டிசையரும், 3வது இடத்தை மாருதி ஸ்விப்ட்டும் பிடித்துள்ளன. ஜுலை மாதம் 12,923 மாருதி டிசையர் கார்களும், 12,677 ஸ்விப்ட் கார்களும் விற்பனை  செய்யப்பட்டுள்ளன. டிசையர் காரின் விற்பனைக்கு மிக நெருக்கமாக ஸ்விப்ட் காரின் விற்பனையும் வந்துள்ளது.

Advertising
Advertising

இப்பட்டியலில், கடந்த மாதங்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த மாருதி சுஸுகி ஆல்டோ இம்முறை 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. ஜூலை மாதம் 11,577 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில்,  5வது மற்றும் 6வது இடங்களை முறையே மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மாருதி சுஸுகி ஈக்கோ ஆகிய கார்கள் பிடித்துள்ளன. கடந்த ஜூலை மாதம் 10,482 பலேனோ கார்களும், 9,814 ஈக்கோ கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த  ஜூலை மாதம் ஹூண்டாய் வெனியூ கார்கள் 9,585 விற்பனை செய்யப்பட்டு, இப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில் 8வது இடத்தை மாருதி சுஸுகி எர்டிகா பிடித்துள்ளது. ஜுலை மாதம் 9,222 எர்டிகா கார்கள் விற்பனை  செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடைசி இரு இடங்களை முறையே ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகியவை பிடித்துள்ளன. 9,012 கார்கள் விற்பனையுடன் ஹூண்டாய் ஐ20 9வது இடத்தையும், 6,585 கார்கள்  விற்பனையுடன் ஹூண்டாய் கிரெட்டா 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

Related Stories: