விளையாட்டு துளிகள்

சென்னை மண்டல கபடி அரசு பள்ளிகள் சாம்பியன்:

பள்ளி மாணவர்களுக்கான  சென்னை மண்டல கபடி போட்டி விருகம்பாக்கத்தில் உள்ள மார்த்தோமா மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 16 பள்ளிகளை சேர்ந்த 400 வீரர்கள்  பங்கேற்றனர். போட்டிகள்  14, 17, 19 வயதுக்கு உட்பட்ட  பிரிவுகளாக நடத்தப்பட்டன. இறுதிப் போட்டியில்  கோயம்பேடு சென்னை மேனிலைப் பள்ளியும், விருகம்பாக்கம் ஜெனரல் கரியப்பா மேனிலைப் பள்ளியும் மோதின. அதில் கோயம்பேடு சென்னை பள்ளி 38-17 என்ற புள்ளிக் கணக்கில் அசத்தலாக  வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. மாணவிகளுக்கான 3 பிரிவுகளிலும் விருகம்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளி மாணவிகள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.

காஞ்சி மாவட்ட செஸ் பதிவு செய்ய ஆக.27 கடைசிநாள்:

காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க சங்கமும்,  திருமால் சதுரங்க அகடமியும் இணைந்து ஸ்ரீபெரும்புதூரில்  செஸ் போட்டி நடத்த உள்ளன.  போட்டி ஆக. 31, செப்.1 என 2 நாட்கள் நடைபெறும். மேலும் போட்டிகள் 8, 10, 12, 14 வயதுக்கு  உட்பட்டவர்களுக்கென 4 பிரிவுகளாக நடக்கும்.   பங்கேற்க விரும்புவோர் ஆக.27ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரம் அறிய, பதிவு செய்ய: 99943 71069.

பாட்மின்டன் செயின்ட் மேரீஸ் சாம்பியன்:

வட சென்னை மாவட்ட அளவிலான  பாட்மின்டன் போட்டி பெரம்பூரில் நடைபெற்றது.   இந்தப் போட்டியில் 20 பள்ளிகளை சேர்ந்த  மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இதில் மாணவியர் பிரிவில் பெரம்பூர் செயின்ட் மேரீஸ் பள்ளி சாம்பியன்  பட்டம் வென்றது. அதேபோல் மாணவர்கள் பிரிவில் பெரம்பூர் செயின்ட் ஜோசப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.

Related Stories: