பள்ளி அணிகள் மோதும் முருகப்பா கோப்பை ஹாக்கி

சென்னை: பள்ளி அணிகளுக்கு இடையிலான  எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கிப் போட்டி ஆக.22ம் தேதி தொடங்குகிறது. சென்னை மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான 2வது எம்சிசி-முருகப்பா சுழற்கோப்பை ஹாக்கிப் போட்டி  நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 12 பள்ளிகள் பங்கேற்கின்றன.  போட்டிகள் எழும்பூர் ஹாக்கி அரங்கில் நாக் அவுட் முறையில் நடைபெறும். இறுதிப் போட்டி ஆக.24ம் தேதி நடக்கும். இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளுக்கு 50  ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் அளிக்கப்படும். சாம்பியன் அணிக்கு எம்சிசி-முருகப்பா சுழற்கோப்பை வழங்கப்படும். இது தவிர சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த தகவல்களை முருகப்பா குழுமத்தின்  நிர்வாக  இயக்குநர் அருண் முருகப்பன், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அமைப்பு  செயலாளர் சண்முகம், கவுரவ செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: