தாஸ் கால்பந்து கோப்பை: பி.எஸ். மேனிலைப்பள்ளி சாம்பியன்

சென்னை: தாஸ் கால்பந்து அகாடமி சார்பில்  பெண்களுக்கான யு-19 கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சென்னையை சேர்ந்த 10 பள்ளிகளும், நெய்வேலி, சேலத்தை  சேர்ந்த தலா ஒரு பள்ளியும்  விளையாடின.  போட்டியை  கால்பந்தாட்ட வீராங்கனை நடிகை அதிதி பாலன் தொடங்கி வைத்தார். இறுதிப் போட்டியில்  மயிலாப்பூர்  பிஎஸ் மேனிலைப் பள்ளி - நெய்வேலி என்எல்சி பெண்கள் மேனிலைப் பள்ளி  அணிகள் மோதின.  அதில் பிஎஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்துடன் கோப்பையை தட்டிச் சென்றது.  என்எல்சி பள்ளிக்கு 2ம் இடத்திற்கான கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Advertising
Advertising

முன்னதாக நடைபெற்ற 3, 4வது இடங்களுக்கான போட்டியில்  ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு  மேனிலைப் பள்ளி -  ஆவடி இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி பள்ளி மோதின. அதில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று  ஒக்கியம் துரைப்பாக்கம்  அரசு மேனிலைப் பள்ளி 3வது இடத்தை பிடித்தது. பரிசளிப்பு விழாவில்  சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன்,    சிவகுமார் கிருஷணமூர்த்தி, காளிதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: